பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணம்
1 min readFamous Kannada actor Puneeth Rajkumar dies
29.10.2021
நடிகர் புனித் ராஜ்குமார் மரணம் அடைந்தார். அவர் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புனித் ராஜ்குமார்
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். (ராஜ்குமார் சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டவர்.). பெங்களூருவில் வசித்து வந்த புனித் ராஜ்குமார், இன்று காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 46.
மோடி இரங்கல்
நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏ.ஆர்.ரகுமான், சோனு சூட், சாந்தனு, மனோபாலா, பிரியா ஆனந்த், தனஞ்செயன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் புனித் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.