முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி; மோடி புகழாரம்
1 min readMuthuramalingam Thevar Jayanthi; Praise Modi
30/10/2021
மக்கள் நலனுக்காகவும், சமூக நீதிக்காகவும் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
தேவர் ஜெயந்தி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்.28 -ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற்றது.
பசும்பொன்னில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், தமிழக அரசின் சார்பில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் காலை 9 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
புகழராரம்
தேவர் ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தேவர் ஜெயந்தி நாளில் முத்துராமலிங்க தேவர் நாட்டுக்காக ஆற்றிய பணிகளை நினைவுகூர்கிறேன். மக்கள் நலனுக்காகவும், சமூக நீதிக்காவும் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத்தேவர்.
தைரியம் மற்றும் கனிவான இதயம் கொண்ட அவர், சமூக நீதிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டார்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.