போப் பிரான்சிஸ் உடன் பிரதமர் மோடி சந்திப்பு
1 min read
Prime Minister Modi meets Pope Francis
30.10.2021
போப் பிரான்சிஸ் உடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
மோடி
இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய 16-வது ஜி-20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பை ஏற்று இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஜி20 மாநாட்டில் கொரோனாவுக்கு பிறகான பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பருவ நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பிரதமர் மோடி நேற்றே தனி விமானத்தில் இத்தாலி சென்றார். இன்று வாடிகன் நகர் சென்ற பிரதமர் மோடி போப் பிரான்சிஸை சந்தித்தார். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்
உலக தலைவர்கள் சந்திப்பு

ஜி-20 அமைப்பின் மாநாடு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டின் போது உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.
ஐ.நா. சபையில் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானாம் கேப்ரிஷியஸ், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்கல், துருக்கி அதிபர் எர்டோகன் உள்பட பல தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.