July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் பெயர் ரகசியம்/ நகைச்சுவை கதை

1 min read

Name Secret of Kannayiram / Story by Thabasukumar

15/11/2021
கண்ணாயிரம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பாட்டிகளுக்கு சேலை கொடுத்தாக சொன்னார். யார் இந்த ஐடியா கொடுத்தது என்று கேட்டபோது தனது நண்பன் சொன்ன ஐடியா என்று கூறினார். அவரை எங்கே விசாரிக்கணும் என்று அருவாஅமாவாசை கேட்டநிலையில் கவுசல்யாவிடம் தான் கேட்கணும் அவள் எனது நண்பனின் மனைவி என்றார். கவுசல்யாவிடம் கேட்டபோது அவரை ஒருவாரம் காணவில்லை. அவரை தேடித்தான் வந்தேன். என் கணவர் பெயர் கண்ணாயிரம் என்று சொன்னாள்.
கண்ணாயிரம் என்று சொன்னதும் அருவா அமாசை எரிச்சலானார். ஏம்மா எடுத்ததுக்கெல்லாம் கண்ணாயிரமுன்னு சொல்லாதே என்று திட்டினார். பின்னர் கண்ணாயிரத்தை பார்த்து ஏய், நண்பன், நண்பன்னு சொல்லுறீய அவன் பெயர் என்னடா என்று கேட்டார்.
கண்ணாயிரம் உடனே கண்ணாயிரம் என்று சொன்னார். அதை கேட்டதும் அருவா அமாசை கோபத்தில் டேய் விளையாடுகிறாயா என்று அதட்டினார். உடனே கூட்டத்தில் இருந்த சிறுவன் எழுந்து பெரியவரே, இதுக்கு மேலேயும் எங்களுக்கு பொறுமைகிடையாது. கண்ணாயிரமுன்னா உங்க மருமகனுக்கு மட்டும்தான் பெயர் இருக்கணுமா, வேற யாருக்கும் இருக்ககூடாதா. உங்க மருமகன் பெயரும் கண்ணாயிரம் அவர் நண்பர் பெயரும் கண்ணாயிரம். புரியுதா என்று சொல்லிவிட்டு அமர்ந்தான்.
அருவா அமாசை திடுக்கிட்டு கண்ணாயிரத்தை பார்த்து அப்படியா என்று கேட்டார். கண்ணாயிரம் ஆமா என்று தலையை ஆட்டினார்.
அருவா அமாசை மெல்ல கண்ணாயிரத்தை பார்த்து நீ விளக்கமா சொல்லியிருக்காமுல்லா. ஏம்மா கவுசல்யா நீயாவது இந்த கண்ணாயிரம் வேற அந்த கண்ணாயிரம் வேற அப்படின்னு சொல்லியிருக்கலாமல்ல என்று அதட்டினார்.
கவுசல்யா உடனே நான்தான் சொல்லவந்தேன். நீங்கதான் என்னை பேசாதேன்னு சத்தம் போட்டிங்க என்றாள்.
அருவா அமாவாசை சமாதானமானார். ஆனாலும் கீழேவிழுந்தாலும் மீசை யில் மண்ஒட்டாத கதையாக கவுசல்யாவை பார்த்து ஏம்மா ஊரிலே பெயருக்கா பஞ்சம், ஒரே பெயரை எல்லாரும் வக்கீங்க. கன்பூசியா இருக்குல்ல என்றார்.
கவுசல்யா உடனே அப்பம் அப்படி வச்சிருக்காங்க. இப்பம் பெயரை மாற்றமுடியுமா என்றுகேட்டாள். அருவா அமாவாசை பதிலுக்கு பெயரை மாற்றவேண்டாம். பெயரோடு புனைப்பெயர் சேர்த்துக்கிட்டா அருமையா இருக்குமுல்ல. இந்தாபாரு, நான் அமாவாசை அன்னைக்கு பிறந்ததால் அமாசை ன்னு பெயர்வைச்சுட்டாங்க. எங்க ஊரிலே இன்னொருவாலிபர் பெயரும் அமாவாசை. அவர் அதிகமாக கடன் வாங்குவார். திடீரென்று கடனை திருப்பிகொடுக்காம தலைமறைவாகிட்டாரு. கடன்காரங்க எல்லாம் என் வீட்டுக்கு தேடிவந்துட்டாங்க. அமாவாசை வீடு எங்க இருக்குன்னு கேட்டவுடன் எல்லோரும் என் வீட்டை அடையாளம் காட்டிட்டாங்க. கடன்காரங்க என் வீட்டை தேடிவந்ததால் நான் டென்சாயிட்டேன். போங்கய்யா, நீங்க தேடிவந்த அமாவாசை நான் இல்ல. நீங்க கடன் கொடுத்த அமாவாசை ஓடிபோயிட்டாருன்னு சொன்னேன்.
அப்போது அங்க வந்த ஒருத்தன் சொன்னான். அந்த அமாசை ஓடிபோயிட்டா என்ன, உங்க பெயரும் அமாவாசைதான. அந்த அமாவாசை வாங்கின கடனை நீங்க கொடுங்க என்று சொன்னான்.
நான் அப்படியா.. இருங்க வீட்டுக்குள்ள போயுட்டுவர்ரேன்னு உள்ளே போனேன். ரூபா தருவாருன்னு காத்திருந்தாங்க. நான் அரிவாளை எடுத்துகிட்டு வெளியே ஓடிவந்தேன். எங்கடாவந்து பணம் கேட்டிங்க வெட்டிபொலிபோட்டிருவேன்னு விரட்டினேன். அன்னையிலிருந்து எனக்கு பெயர் அருவா அமாவாசை. நானும் பேமசானேன். பஞ்சாயத்து பேசி சம்பாதிச்சேன் என்று சொன்னார்.
உடனே கண்ணாயிரம் எனக்கு கண்ணாயிரமுன்னு நீங்கதான் பெயர்வைச்சிங்கன்னு எங்க அம்மா சொன்னா. எதுக்காக அந்த பெயர் வைச்சிங்க. அதனால்தானே இப்பம் குழப்பமாக இருக்கு என்றார். அருவா அமாவாசை லேசா சிரித்தபடி, டேய். பிறந்தபோது உன் கண்ணு ரொம்ப பெரிசா இருந்துச்சு. அதை பார்த்துட்டு கண்ணாயிரமுன்னு பெயர் வைச்சேன் என்று சொன்னார்.
சரி, இந்த பெயர் குழப்பம் வராம இருக்க நீங்க வழிசொல்லுங்க என்று அவரிடம் கண்ணாயிரம் கேட்டார். அதற்கு அருவா அமாவாசை அப்படியா, இன்று முதல் நீ பெரியகண்ணாயிரமுன்னு அழைக்கப்படுவாய் என்று சொன்னார்.
அப்படின்னா என் நண்பன் கண்ணாயிரத்துக்கு ஒரு பெயர்சொல்லுங்க என்று கண்ணாயிரம் கேட்டார். அதற்கு அவன் சின்ன கண்ணாயிரமுன்னு வச்சுக்க என்றார். கண்ணாயிரம் மகிழ்ச்சி அடைந்தார்
.
சரி, கண்ணாயிரம் பெயர் பிரச்சினை தீர்ந்துச்சு. அப்புறம் வேற என்ன பிரச்சினை என்று அருவா அமாசை கேட்டார். முதியவர் மெல்ல இந்த சேலை பிரச்சினை தீரலை. கண்ணாயிரம் தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு சேலைகொடுத்தான். எங்களுக்கு ஏன் கொடுக்கலை என்று கேட்டார்.
கண்ணாயிரம் உடனே, உங்களுக்கு எப்படி சேலை கொடுக்க முடியும் என்று சொல்லி சிரித்தார். ஏய். நீ எதுக்கெடுத்தாலும் குண்டக்கமண்டக்கன்னு பேசாதே. எங்களுக்கு வேட்டி கொடுத்திருக்கலாமுன்னு கேட்டேன். என்றார்.
அதற்கு கண்ணாயிரம் ஆண்களுக்கு குவார்ட்டர் கொடுத்தால் போதுமுன்னு சொன்னாங்க. அதுவும் தேர்தலுக்கு முந்தின நாள் கொடுத்தால் சிறப்பு என்று நண்பன் சின்னகண்ணாயிரம் சொன்னான் என்றார்.
அதைகேட்டதும் முதியவர் சிரித்தார்.
சரிப்பா, பெண்களுக்கு சேலை கொடுக்காம பாட்டிகளுக்கு கொடுத்திருக்கிய ஏம்பா என்று கேட்டார். பெரிய கண்ணாயிரம் ம்.. இது ரகசியமா கொடுக்கிற சமாச்சாரம். பெண்களுக்கு கொடுத்தா ரகசியமா இருக்குமா. வீட்டுக்குள்ள பிரச்சினை வந்திராதா. புரியாம பேசுறீங்க. என்றார். முதியவர், ம்.. நீ விவரம் இல்லாத ஆளுன்னு நினைச்சேன் என்றார்.
உடனே கூட்டத்தில் இருந்த பெண், பெரிய கண்ணாயிரம் எங்களை அவமதிச்சிட்டாரு. அதனாலே எங்க ஓட்டு அவருக்கு கிடையாது என்றார். ஆ.. அப்படியெல்லாம் சொல்லாதீங்க. உங்களுக்கு தனி தேர்தல் அறிக்கை இருக்கு. அதிலே என்ன இருக்கு என்பது ரகசியம். அதை வேறயாரும் காப்பி அடிச்சுட்டா என்ன பண்ணுறது. அதான் அதை நான் வேறுயாருக்கிட்டேயும் சொல்லல…உங்கள் மனம் குளிரும்படி அறிவிப்பு இருக்கும் போதுமா என்றார். உடனே பெண்கள், எங்கள் ஓட்டு பெரிய கண்ணாயிரத்துக்கே என்று கோஷமிட்டனர்.
உடனே மோட்டார்சைக்கிள்வாலிபர்.. கோபமாக.. பெரிய கண்ணாயிரம் சேலைவாங்கிகொடுத்ததை ஒத்துக்கொண்டார். நான் தேர்தல் கமிஷனில் புகார் செய்வேன்.என்றான்.
கண்ணாயிரம் மெல்ல, ஏய் தேர்தல்தேதி அறிவிக்க பிறகுதான் எதுவும் கொடுக்கக் கூடாது. தெரியுமா என்றார். தேர்தல் எப்போ என்று அருவா அமாவாசை கேட்டார். அதற்கு பெரிய கண்ணாயிரம், அது தெரியலை என்று இழுத்தார். ஏங்க எப்போவருமுன்னு தெரியாத தேர்தலுக்குத் தான் இந்த அக்கப்போரா என்றார் அருவா அமாவாசை. அப்போது ஒரு சிறுவன் எழுந்து பாண்டிச்சேரிக்கு உள்ளாட்சி தேர்தல் வரும். ஆனா உடனே வராது என்று சொல்லி சிரித்தான்.(தொடரும்)

-வே.தபசுகுமார், புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.