June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

ஒருங்கிணைப்பாளர் பதவி: பழனிசாமி, பன்னீர்செல்வம் வேட்புமனு

1 min read

Coordinator post: Palanisamy, Panneerselvam nomination

4.12.2021
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட முறையே பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி இணைந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஒருங்கிணைப்பாளர்

அ.தி.மு.க.,வில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில், கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு, வரும், 7ம் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள், ஒற்றை ஓட்டின் வழியே இணைந்தே தேர்வு செய்வர் என, கட்சி செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல், நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் துவங்கியது.

இந்நிலையில், இன்று தலைமை அலுவலகத்தில் பன்னீர்செல்வமும், பழனிசாமியும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *