June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் பலி

1 min read

Three killed in Nellai accident, including medical college students

4.1.2.2021
நெல்லையில் கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

விபத்து

நெல்லை ரெட்டியார்பட்டி நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து மதுரை சென்று கொண்டு இருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கரவாகனம் மீது மோதியது. இதில் அந்த இரு சக்கரவாகனத்தில் வந்த மாணவிகள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் இரு சக்கரவாகனத்தில் வந்த மருத்துவக்கல்லூரி மாணவிகள் 2 பேர் மற்றும் கார் டிரைவர் ஆகிய 3 பேரும் அதே இடத்தில் பலியானார்கள்.

இந்த விபத்தில் இரு சக்கரவாகனத்தில் வந்த மருத்துவக்கல்லூரி மாணவிகள் 2 பேர் மற்றும் கார் டிரைவர் ஆகிய 3 பேரும் அதே இடத்தில் பலியானார்கள்.
இறந்தவர்கள் பெயர் காயத்திரி, பிரிட்டோ ஏஞ்சல் எனவும்,காரை ஓட்டிவந்தவர் பெயர் சண்முகசுந்தரம் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் ஒரு மாணவி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கார் டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *