August 1, 2026

Seithi Saral

Tamil News Channel

திருநங்கையாக மாறியதால் மகனை கூலிப்படை மூலம் கொன்ற தாய் கைது

1 min read

Mother arrested for killing her son by mercenaries

22.12.2021
திருநங்கையாக மாறியதால் பெற்ற மகனையயே கூலிப்படை மூலம் கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

திருநங்கை

சேலம் மாநகர் ஜாகிர் அம்மாபாளையம் சேர்ந்தவர் உமாதேவி. கணவரை பிரிந்து வசிக்கும் இவரது மகன் நவீன்குமார் இவர் சமீபத்தில் திருநங்கையாக மாறி தனது பெயரை அக்ஷிதா என மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில் கடந்த வாரம் வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் நவீன்குமார் காயங்களுடன் கிடந்துள்ளார் அவரை மீட்ட உமாதேவி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதில் சிகிச்சை பலனின்றி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நவீன் குமார் என்ற அக்ஷிதா உயிரிழந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேக மரணம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

தாய்

சந்தேகத்தின் பேரில் நவீன் குமாரின் தாய் உமாதேவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் பல் உண்மைகள் வெளிவந்தன.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;-

மகன் திருநங்கையாக மாறியது பிடிக்காததால் உமாதேவி தனக்கு தெரிந்த நண்பர்களை கொண்டு நவீன் குமாரை கொலை செய்ய தூண்டி உள்ளார். அவர்கள் நவீன்குமாரை தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்து உள்ளார். இறந்து விட்டதாக கருதி ,அவரை தூக்கி வீசி விட்டு சென்றனர்.

பின்னர் ஏதும் தெரியாதது போல உமாதேவை மகனை தானே மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் பார்த்த போது நவீன்குமார் இறந்து போனது போலீசாருக்கு தெரிய வந்தது.

கைது

இதனை தொடர்ந்து தாய் உமாதேவியை கைது செய்த போலீசார், நவீன்குமார் மீது தாக்குதல் நடத்திய வெங்கடேஷ், காமராஜ், கார்த்திகேயன், சந்தோஷ், சிவகுமார் உட்பட ஆறு பேரையும் அதிரடியாக கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மகன் திருநங்கையாக மாறியதால் அவமானம் தாங்க முடியாத தாய், தெரிந்த நபர்களை வைத்து மகனையே அடித்துக் கொன்ற சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *