August 1, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 604 பேருக்கு கொரோனா; 8 பேர் சாவு

1 min read

Corona for 604 people in Tamil Nadu today; 8 people killed

22.12.2021

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 602 ல் இருந்து 604 ஆக சற்று அதிகரித்துள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர். 695 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் 1,01,713மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 599 பேரும் இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அர நாட்டில் இருந்து வந்த தலா இரண்டு பேர் , மற்றும் ஆந்திரா மாநிலத்திலிருந்து வந்த ஒருவர் என மொத்தம் 604 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,41,617 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,65,18,363 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 344பேர் ஆண்கள், 260பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 695 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,97,939ஆக உயர்ந்துள்ளது.

8 பேர் சாவு

இன்று தமிழகத்தல் 8பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,699 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக இருந்த நிலையில் இன்று 136 ஆக சற்று அதிகரித்துள்ளது.
கோவையில்94 பேருக்கும், திருப்பூரில் 48 பேருக்கும், ஈரோட்டில் 47 பேருககும், செங்கல்பட்டில் 43 பேருக்கும், நெல்லையில் 5 பேருக்கும், தூத்துக்குடியில் 6 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தென்காசி, ராணிப்பேட்டை, தேனி, பெரம்பலூர், மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று இல்லை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *