ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு 182 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
1 min read182 terrorists shot dead in Jammu and Kashmir this year
31.12.2021
ஜம்மு காஷ்மீரில் இந்த (2021) ஆண்டு 182 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பயங்கரவாதம்
ஜம்மு காஷ்மீரில் 2018, 2019, 2020 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு (2021) பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் குறைந்துள்ளன.
அதேநேரத்தில், பயங்கரவாத அமைப்பில் 134 இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களில் 74 பேரை கொன்றுவிட்டோம், மேலும் 22 பேரை மீட்டு, கைது செய்துள்ளோம்.
பாகிஸ்தானில் இருந்து 34 பயங்கரவாதிகள் ஊடுருவினர். இந்த ஆண்டு ஊடுருவல் வழக்குகள் மிகக்குறைவாகும். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் பணத்தை டிரோன்கள் மூலம் வழங்க முயன்று தோல்வியடைந்தனர்.
இந்த ஆண்டு நடத்திய 100 ஆபரேஷன்களில் 22 முக்கிய கமாண்டர்கள் உள்பட 182 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.