April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

கங்கை நதி, காசி கோவில் அருகே “இந்து மதத்தினர் அல்லாதோருக்கு அனுமதி இல்லை” -சுவரொட்டியால் பரபரப்பு

1 min read

“Non-Hindus are not allowed” near the Kasi temple on the river Ganges – by poster

“இந்து மதத்தினர் அல்லாதோருக்கு அனுமதி இல்லை… இது கோரிக்கை அல்ல எச்சரிக்கை” என கங்கை நதிக்கரை மற்றும் வாரணாசி கோவில் அருகே சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசி கோவில்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதி கரையோரம் இந்து மதத்தினரின் கோவிலான உலகப்புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. கங்கை நதியில் நீராடிவிட்டு இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வழிபாடு செய்ய வருவது வழக்கமாகும்.

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சில இளம் பெண்கள் விஸ்வநாதர் கோவில் அருகே கங்கை நதிக்கரையில் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சுவரொட்டிகள்

இந்நிலையில், “இந்து மதத்தினர் அல்லாதோருக்கு அனுமதி இல்லை” என்று கங்கை நதி மற்றும் காசி விஸ்வநாதர் கோவிலை சுற்றியும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த சுவரொட்டிகளின் தலைப்பில், “இந்து மதத்தினர் அல்லாதோருக்கு அனுமதி இல்லை’ என எழுதப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, காசியில் கங்கை நதியின் கரைகள் மற்றும் கோவில்கள் சனாதன தர்மம், இந்திய கலாசாரம், நம்பிக்கைகளின் அடையாளம். சனாதன தர்மம் மீது நம்பிக்கைக்கொண்டவர்கள் வரவேற்கப்படுகின்றனர். அது தவிர இது ஒன்றும் சுற்றுலா தளம் அல்ல. ’இந்து மதத்தினர் அல்லாதோருக்கு அனுமதி இல்லை… இது கோரிக்கை அல்ல எச்சரிக்கை’ என எழுத்தப்பட்டுள்ளது.

விசாரணை

இந்த சுவரொட்டிகளை ஒட்டியது யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் இளைஞரணி அமைப்பான பஜ்ரங் தல் அமைப்பை சேர்ந்தவர்களை இந்த சுவரொட்டிகளை ஒட்டி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.