May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

தொழில் புரிய மிகச் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்

1 min read

Tamil Nadu tops list of best states to work in

19.1.2022

தொழில் புரிய மிகச் சிறந்த மாநிலங்கள் வரிசையில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்து உள்ளது.

முதலீடு

இந்தியாவில் தொழில் புரிய மிகச் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் 9 மாதங்களில் ரூ.1.44 லட்சம் கோடி முதலீடு ஈர்த்து உள்ளது. டாடா குழுமம், ஜே.எஸ்.டபிள்யூ. ரினியூவபிள், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டி.வி.எஸ். மோட்டார், அதானி குழுமம், லார்சன் அண்ட் டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் முக்கியமானவையாகும்.

குஜராத் மாநிலம் இந்த வரிசையில் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.77,892 கோடி ஆகும். அதே போல 3-ம் இடத்தில் உள்ள தெலங்கானாவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ. 65,288 கோடி ஆகும்.

இந்தியா முழுவதும் நடப்பு நிதி ஆண்டின் 9 மாதங்களில் 7,764 புதிய திட்டப் பணிகளில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடு ரூ.12,76,679 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.