128 பேருக்கு பத்ம விருதுகள்: மத்திய அரசு அறிவிப்பு
1 min read
Padma Awards for 128: Central Government Announcement
25.1.2022
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, சிறந்த முறையில் பணியாற்றிய, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பழம் பெரும் நடிகை சவுக்கர் ஜானகிக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் – தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசு இன்று (ஜன. 25) அறிவித்தது.
இதன்படி இந்தாண்டு 128 பேருக்கு பத்ம விருதுக்கு தேர்வு பெற்றுள்ளவர்கள் விவரம்:
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங்கிற்கும் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது அறிவிக்கப்பட்டவர்களின் விவரம்:
*சீரம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனாவாலாவுக்கு பத்மபூஷன் விருது
*பாரத் பயோடெக் நிறுவன தலைவர் கிருஷ்ணா எல்லா, சுசித்திரா எல்லாவுக்கு பத்மபூஷன் விருது
*பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, சிற்பி பாலசுப்பிரமணியனுக்கு பத்மஸ்ரீ விருது
பத்ம விபூஷண்: 4
1) உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்
2) மறைந்த முப்படை தலைமை தளபதி விபின் ராவத்
3) பிரபா அட்ரே (மஹாராஷ்டிரா) கலை.
4) ஸ்ரீ ராதேஷ்யாம் கெம்கா (இலக்கியம் கல்வி)
பத்ம பூஷண்: 17
1) சுந்தர் பிச்சை (கூகுள் நிறுவனம்)
2) சத்ய நாதெல்லா
3) காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்
உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்மஸ்ரீ: 107 பேருக்கு
1) நீரஜ் சோப்ரா
2) சோனு நிஹாம்
3) பழம் பெரும் நடிகை சவுக்கார் ஜானகிஉள்ளிட்ட 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன