May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையம் பத்திரகாளி அம்மன், முப்புடாதி அம்மன்கோவில் கொடை விழா தொடங்கியது

1 min read

Kotai Festivel of Pathikalai and Muppudathi Amman Kovil at Kadayam

2/1/2022
கடையம் பத்திரகாளி அம்மன் மற்றும் முப்புடாதி அம்மன் கோவில்களின் கொடை விழா தொடங்கியது.

கொடை விழா

தென்காசி மாவட்டம் கடையத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற பத்திரகாளி அம்மன் மற்றும் முப்புடாதி அம்மன் கோவில்கள் உள்ளன. இந்த இரு கோவில்களிலும் தைமாதம் கொடை விழா வெகு விமரிசையாக நடைபெறும். அதாவத தை மாதம் 2 &ம் செவ்வாய் கால்நாட்டப்பட்டு மூன்றாம் செவ்வாய் திருவிழா தொடங்கி 3&ம் செவ்வாய் முத்தாய்ப்பான நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறும்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் பல கோவில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி இல்லை. ஆனால் தை மாதம் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்ததால் இந்த இருகோவில்களிலும் விழா தடையின்றி நடந்தது. இந்த ஆண்டு ஒமைக்ரான் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் கொடைவிழா நடக்குமோ என்ற அச்சம் நிலவியது.


ஆனாலும் பூஜையை மட்டும் நடத்திக் கொள்ளலாம் என்ற நியதியில் முப்புடாதி அம்மன் கோவிலில் கடந்த 25.1.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது. ஆனால் பத்திரகாளி அம்மன் கோவிலின் மூலக்கோவில் ஊருக்கு மேற்கே வயல்வெளியில் உள்ளது. அங்குதான் கொடைவிழா நிறைவு பெறும். இதனால் கொடை விழாவை நடத்த முடியாது என்ற அச்சகத்தில் கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெறவில்லை.
இந்த நிலையில் ஒமைக்ரான் தாக்கம் குறைந்து வந்ததால் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் பத்திரகாளி அம்மன் கோவிலில் கொடை நடத்த தீர்மானிக்கப்பட்டு நேற்று (பிப்ரவரி 1&ந் தேதி ) அதிகாலையில் கால் நாட்டப்பட்டு நேற்றே திருவிழா தொடங்கியது.
இதற்காக நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ராமநதி அணை கால்வாயில் இருந்து புனிதநீர் கொண்டுவந்த சிறப்பு அபிஷேகம் ஆராததனை நடந்தது. நேற்று காலை காலை 10 மணியளவில் உடையார் பிள்ளையார் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து பத்திகாளி அம்மன் கோவிலுக்கு வந்து பின்னர் மூலஸ்தான கோவிலுக்குச் சென்றனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதனை அடுத்து அன்னதானம் நடந்தது.

காப்புக் கட்டுதல்

நேற்று இரவு 10 மணிக்கு மூலஸ்தான கோவிலில் காப்புகட்டும் நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு அங்கிருந்து அம்மன் புறப்பாடு நடந்து ஊருக்குள் வந்து வீதி உலா நடந்தது. இதனை அடுத்து தினமும் நள்ளிரவு வெவ்வேறு வாகன சப்பரத்தில் அம்மன் வீதி உலா வருகிறார். இன்று 2&ம் திருவிழா நடக்கிறது. வருகிற வெள்ளிக்கிழமை திருதேர் கால்நாட்டு நடக்கிறது. ஞாயிற்றுகிழமை கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
வருகிற செய்வாக்கிழமை கொடை விழா நடக்கிறது. அன்று பகல் ஜம்புநதியில் இருந்து அலத்தீர்த்தம் எடுத்துவந்து சாமி ஊர்விளையாடும் நிகழ்ச்சி நடைபெறும். அன்பின் நள்ளிரவு மீண்டும் அலத்தீர்த்தம் நடைபெறும். அதன்பின் அம்மன் வீதிஉலா வந்து அலங்கரிக்கப்பட்ட தேர் சப்பரத்தில் எழுந்தருள்வார். இதனை அடுத்து பக்தர்கள் அந்த பெரிய தேர் சப்பரத்தை தோளில் சுமந்தபடி மூலத்தான கோவிலுக்குச் செல்வார்கள். அங்கு கோவில் அருகே உள்ள 50 அடி உயர பாறையில் தேர் சப்பரத்தை ஆனாயசமாக சுமந்து செல்லும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். அங்கு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானத்துடன் கொடை விழா நிறைவு பெறும்.

எதிர்சேவை

அதேபோல் முப்புடாதி அம்மன் கோவிலில் நேற்று ஒன்றாம் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அங்கு வருகிற வெள்ளிக்கிழமை தேருக்கு கால்நாட்டும் நிகழ்ச்சி நடைபெறும். அங்கும் தினமும் அம்மன் வீதி உலா வருகிறார். வருகிற செவ்வாய்க்கிழமை தேரில் அம்மன்வீதி உலா வருவார்.
அன்றைய தினம் பத்திரகாளி அம்மனும், முப்புடாதி அம்மனும் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே எதிர்சேவை(சந்திப்பு) நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் புதன் கிழமை பூப்பல்லக்கில் முப்புடாதி அம்மன் வீதி உலா நடைபெறும்.
பத்திரகாளி அம்மன், முப்புடாதி அம்மன் கோவில்களில் ஒருசேர திருவிழா நடைபெறுவதால் ஊரே விழாக்கோலம் நடைபெறும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.