May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

பாஜகவில் இணைந்த லாயம் சிங் மருமகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு

1 min read

BJP-affiliated Layam Singh’s daughter-in-law denied seat

2.1.2022

பாஜகவில் இணைந்த முலாயம் சிங்கின் மருமகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டுள்ளது.

முலாயம் சிங் மருமகள்

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டுகிறது.

இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.

இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சியின் நிறுவன தலைவரான முலாயம் சிங்கின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் கடந்த 19-ம் தேதி பாஜகவில் இணைந்தார். இந்த சம்பவம் உத்தரபிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர், வரும் சட்டசபை தேர்தலில் லக்னோ கண்டோன்மெண்ட் தொகுதியில் பாஜக வேட்பாளராக அபர்ணா களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், லக்னோவில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளுக்கு பாஜக இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில், அபர்ணா யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. லக்னோ கண்டோன்மெண்ட் தொகுதியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தொகுதி வேறு நபருக்கு ஒதுக்கப்பட்டது.

லக்னோவில் உள்ள 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்தது. அதில், அபர்ணா பெயர் இடம்பெறவில்லை. அதேவேளை, பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பாஜக கட்சியில் இணைந்த அமலாக்கத்துறை முன்னாள் இணை இயக்குனரான ராஜேஷ்வர் சிங்கிற்கு சரோஜினி நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.