May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தினசரி கொரோனா 1,61,366 பேராக குறைந்தது

1 min read

The daily corona in India dropped to 1,61,366

2.1.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒருநாளில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 366 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்று பாதிப்பான 1 லட்சத்து 67 ஆயிரத்து 59 மற்றும் கடந்த திங்கட்கிழமை பாதிப்பான 2 லட்சத்து 9 ஆயிரத்து 918- ஐ விட குறைவாகும்.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 16 லட்சத்து 30 ஆயிரத்து 865 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சத்து 54 ஆயிரத்து 76 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 92 லட்சத்து 30 ஆயிரத்து 198 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 17 லட்சத்து 43 ஆயிரத்து 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 192 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 96 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 166 கோடியே 68 லட்சத்து 48 ஆயிரத்து 204 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.