May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

லதா மங்கேஷ்கரின் அஸ்தி குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

1 min read

Handing over of Lati Mangeshkar’s remains to the family

7.2.2022

லதா மங்கேஷ்கரின் அஸ்தி, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

லதா மங்கேஷ்கர்

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் உடல், ராணுவ வாகனத்தில் வைத்து நேற்று இறுதி சடங்கிற்காக சிவாஜி பார்க் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம், மும்பை பிரபுகஞ்சில் இருந்து தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு இசை குயிலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.


மும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டு இருந்த பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். இறுதி அஞ்சலி நிகழ்வில் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே , சரத் பவார், சச்சின், ஷாருக்கான் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

லதா மங்கேஷ்கர் உடலுக்கு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அவரின் உடலில் போர்த்தப்பட்ட தேசியக்கொடி குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து மும்பை சிவாஜி பூங்காவில் 21 குண்டுகள் முழங்க முப்படை, மாநில காவல்துறை மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

அஸ்தி

இந்நிலையில் இன்று லதா மங்கேஷ்கரின் அஸ்தி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கபட்டது, அவரது மருமகன், ஆதிநாத் மங்கேஷ்கர், லதா மங்கேஷ்கர் தகனம் செய்யபட்ட மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் அவரது அஸ்தியை பெற்றுக்கொண்டார்.

இதுகுறித்து உதவி நகராட்சி ஆணையர் கிரண் திகாவ்கர் கூறுகையில், “லதாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான ஹிருதயநாத் மங்கேஷ்கரின் மகனான ஆதிநாத்திடம் அஸ்தி கலசத்தை ஒப்படைத்தோம்,” என்று தெரிவித்தார்.

மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் நேற்று காலை முதல் சாரை சாரையாக வந்து தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

சிலை

லதா மங்கேஷ்கர் நினைவாக மத்திய பிரதேச முதல்-மந்திரி எஸ்.எஸ்.சவுகான்
மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “லதா ஜி இந்தூரில் பிறந்தார், எனவே இந்தூரில் ஒரு மியூசிக் அகாடமி, மியூசிக் யுனிவர்சிட்டி, மியூசியம்- திரு உருவ சிலை நிறுவப்படும். லதா மங்கேஷ்கர் விருது அவரது பிறந்தநாளில் ஆண்டுதோறும் வழங்கப்படும்” என்றார்.

லதா மங்கேஷ்கர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.