July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

மலை இடுக்கில் 3 நாட்களாக சிக்கி தவித்த இளைஞர் மீட்பு

1 min read

Youth rescued after being trapped for 3 days in a mountain pass

9.2.2022

பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு (வயது28). இவரும் வேறு 3 நண்பர்களும் கடந்த திங்கட்கிழமை மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றனர். மதியம் பாபு மலையில் இருந்து இறங்கியபோது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்தார். அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.

இதை தொடர்ந்து அவர்கள் மலையில் இருந்து இறங்கி மலம்புழை வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து சென்றனர். ஆனால் பாபு சிக்கியுள்ள இடத்தை அவர்களால் அடையாளம் காணமுடியவில்லை. இதை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடங்கியது. நீண்ட நேரத்திற்கு பின் வாலிபர் பாபு சிக்கியுள்ள இடம் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மலை இடுக்கில் சிக்கிய இளைஞரை ஹெலிகாப்டர் மூலம் கடற்படையினர் மீட்க மேற்கொண்ட போது முயற்சி தோல்வியில் முடிந்தது.

அதனை தொடர்ந்து இந்திய ராணுவத்தின் உதவியை கேரள அரசு நாடியது.

இதனையடுத்து தகை வெலிங்டன், பெங்களூரில் இருந்து வந்த மலையேற்ற பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக மலை இடுக்கில் 48 மணி நேரமாக சிக்கி உள்ள பாபுவை நெருங்கிய ராணுவ வீரர்கள் அவருக்கு தெம்பு அளிக்கும் வகையில் உணவு, தண்ணீர் வழங்கினர். அவரை கீழே கொண்டும் பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

சிக்கினார்

உணவு, தண்னீர் இன்றி தவித்து வந்த இளைஞர் பாபுவை 43 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இந்திய ராணுவம் அவரை பத்திரமாக மீட்டது. மலம்புழாவைச்சேர்ந்த பாபு கடந்த 7-ம் தேதி நண்பர்களுடன் மலையேற்றத்திறாக சென்றபோது சிக்கினார்.

மலை இடுக்கில் சிக்கி தவித்த இளைஞர் பாபுவை இந்திய ராணுவ வீரர்கள் கயிறு மூலம் மீட்டனர். இளைஞர் மீட்கப்பட்ட தகவலை உறுதிப்படுத்தினார் பாலக்காடு எம்.எல்.ஏ சாபி பரம்பேல்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.