இந்தியாவில் மேலும் புதிதாக 58,077 பேருக்கு கொரோனா
1 min read
Corona for a further 58,077 newcomers in India
11.2.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 58,077 ஆக குறைந்து உள்ளது. ஒரே நாளில் பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில், இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு 58,077 ஆக உறுதியாகி உள்ளது என தெரிவித்து உள்ளது.
இது, நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது குறைவாகும். நேற்று 67,084 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், ஒரே நாளில் 58,077 ஆக குறைந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4,24,78,060ல் இருந்து 4,25,36,137 ஆக உயர்ந்து உள்ளது.
ஒரே நாளில் 1.50 லட்சம் பேர் (1,50,407 பேர்) குணமடைந்து உள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கையானது 4,11,80,751ல் இருந்து 4,13,31,158 ஆக உயர்வடைந்து உள்ளது.
657 பேர் சாவு
இந்தியாவில் கொரோனாவுக்கு 657 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று இறப்பு எண்ணிக்கை 1,241 ஆக இருந்தது. இதனால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,06,520ல் இருந்து 5,07,177 ஆக உயர்ந்து உள்ளது.