August 4, 2026

Seithi Saral

Tamil News Channel

‘டிரோன்’ இறக்குமதிக்கு மத்திய அரசு தடை

1 min read

Federal government bans drone imports

10.2.2022
த்திய அரசு, ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து உள்ளது.
கடந்த 2021 ஆகஸ்டில், டிரோன் தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதே நேரத்தில் ட்ரோன் தயாரிப்பு தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில், தயாரிப்புக்கு ஏற்ப சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ட்ரோன்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதேசமயம் ட்ரோன் தயாரிப்புக்கு தேவையான உதிரி பாகங்களை அனுமதியின்றி இறக்குமதி செய்யலாம்.எனினும் அனைத்து பாகங்களையும் இறக்குமதி செய்து, ஒருங்கிணைத்து, ட்ரோன் விற்பனை செய்ய அனுமதி இல்லை.
அதேசமயம், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு தேவையான நவீன ட்ரோன்களை, அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகத்தின் ஒப்புதலுடன் இறக்குமதி செய்யலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *