May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

உக்ரைனுக்கு மேலும் ரூ. 26 ஆயிரம் கோடி ராணுவ உதவி; அமெரிக்கா அறிவிப்பு

1 min read

A further Rs. 26 billion military aid; United States Announcement

26.2.2022
உக்ரைனுக்கு மேலும் ரூ.26 ஆயிரம் கோடி ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

உக்ரைன்

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ் -ஐ ரஷிய படைகள் நெருங்கி வருவதால் போர் தீவிரமடைந்துள்ளது.

இதற்கிடையில், உக்ரைனுக்கு அமெரிக்கா பண உதவி வழங்கி வருகிறது. ஏற்கனவே 4,500 கோடி ரூபாய் மற்றும் 18 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.26 ஆயிரம் கோடி

இந்நிலையில், உக்ரைனுக்கு கூடுதல் பணத்தை வழங்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, உக்ரைனுக்கு மேலும் 26 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

ரஷியாவின் தாக்குதல் மற்றும் நியாயப்படுத்தமுடியாத போருக்கு எதிராக உக்ரைனுக்கு உதவும் வகையில் இந்த ராணுவ உதவிகள் வழங்கப்பட்டுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.