நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி: வெளிவருவதில் சிக்கல்?
1 min read
Jayakumar’s bail plea dismissed in land grab case: Problems coming out?
3.3.2022
நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயக்குமார்
சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகாரில் ரூ.5 மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார், மருமகன், மகள் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை மார்ச் 11 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திமுக நிர்வாகியை தாக்கியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கிய நிலையில், ஜெயக்குமார் சிறையில் இருந்து வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.