June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

சி-17 விமானங்கள் மூலமாக 798 பேர் தாயகம் திரும்பி உள்ளனர்

1 min read

798 people have returned home by C-17 aircraft

3.3.32022
இந்திய விமானப்படையின் முதல் நான்கு சி-17 விமானங்கள் மூலமாக 798 பேர் உக்ரைனில் இருந்து அழைத்துவரப்பட்டுளளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்தியர்கள்

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 8-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
அந்தவகையில், உக்ரைனில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
மீட்புப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் போலாந்து, ரூமானியா, ஹங்கேரி, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளில் 24*7 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டதுடன் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப்சிங் புரி, ஜோதிராதித்திய சிந்தியா, கிரெண் ரிஜிஜு, வி.கே. சிங் ஆகியோர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

ஏற்கெனவே, இந்தியர்களை மீட்கும் பணியான ‘ஆப்பரேஷன் கங்கா’ திட்டத்தில் உள்ள ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட்டுடன் இந்திய விமானப்படையின் விமானங்களும் களமிறங்கியுள்ளன.இதற்காக விமானப்படையின் சி-17 விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அதன்படி இதுவரை இந்திய விமானப்படையின் முதல் நான்கு சி-17 விமானங்கள் மூலமாக ருமேனியா, ஹங்கேரி, போலந்து வழியாக 798 பேர் உக்ரைனில் இருந்து அழைத்துவரப்பட்டுளளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

தாயகம் வந்த இந்தியர்களை மத்திய பாதுகாப்புத்துறை இணை மந்திரி அஜய் பட் வரவேற்றார்.

ஸ்லோவாகியாவில் இருந்து 370 மாணவர்களுடன் ‘ஆப்ரேசன் கங்கா’ திட்டத்தின் கீழ் 2 விமானங்கள் டெல்லி வர உள்ளதாக மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *