August 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 292 பேருக்கு கொரோனா; ஒருவர் சாவு

1 min read

Corona for 292 people in Tamil Nadu today; One is death

3.3.2022

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 52 ஆயிரத்து 851 பேருக்குகொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று 53 ஆயிரத்து 194 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இன்று புதிதாக 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையான 320 ஐ விட சற்று குறைவு.

இன்று கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,010 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் கடந்த இன்று 778 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,08,373 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 3 ஆயிரத்து 950 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் நேற்று 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்று 83 ஆக குறைந்தது.————————————————————

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *