December 9, 2024

Seithi Saral

Tamil News Channel

உடல் நலக்குறைவால் தான் ஜெயலலிதா மறைந்தார்-டிடிவி தினகரன் பேட்டி

1 min read

/Jayalalithaa passed away due to ill health – DTV Dinakaran interview//////

7.3.2022

உடல் நலக்குறைவால் தான் ஜெயலலிதா இறந்தார் என்று டிடிவி தினகரன் கூறினார்.

ஜெயலலிதா மரணம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், உடல்நலக்குறைவால் தான் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தார் என்று டிடிவி தினகரன் கூறினார். இதுபற்றி அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

உடல்நலக்குறைவால் தான் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்தார் என்பது தான் உண்மை.
ஜெயலலிதாவின் மரணம் அரசியலாக்கப்பட்டுள்ளது. எந்த முடிவாக இருந்தாலும் ஜெயலலிதாவே எடுத்திருப்பார். தேவையில்லாமல் எங்கள் சித்தி மீது பழிபோட்டு எதோ பண்ணிப் பார்த்தார்கள். அது நடக்கவில்லை. இதனால் மக்கள் வரிப்பணம் தான் வீணாகியுள்ளது.

கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக நிர்வாகிகளை சந்திக்க முடியவில்லை. மற்றவர்களுக்கு நம்மால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக போராட்டங்களை கூட தவிர்த்துள்ளோம்.

ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளில் இறங்கியுள்ளோம். முதற்கட்டமாக வரும் 18ம் தேதி முதல், கட்சி பொறுப்பாளர்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து மார்ச் 14 ஆம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். உக்ரைனில் இருக்கும் மாணவர்கள் மீட்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு முறையாக செயல்படுகிறது. திமுகவுக்கு வாக்களிக்க கூடாது என மக்கள் முடிவெடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.///////////////////////////////////////////////

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.