May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பணி

1 min read

Fieldwork for Agricultural College students

29.3.2022
வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமத்திற்குச் சென்று களப்பணி செய்தனர்.

மாணவிகள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை, வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகளின் 11 பேர் கொண்ட குழு கிராமத்திற்குச் சென்று களப்பணி மேற்கொண்டனர். அந்தக் குழுவில் மாணவிகள் பா.சாருமதி, ஜெ.துர்காதேவி, ஜோதி யாகன்டி, கு.கீர்த்தனா பிரியா, ரா.மின்னுஷா, ரா.முத்துச்செல்வி, செ.நந்தினி, மா.பிரியதர்ஷினி, அ.சிநேகா மற்றும் ஷ. ஸ்ரீ நிதி ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
அவர்கள் கோவை மாவட்டம் அன்னூர் அருகே பொகளூர் ஊராட்சியில் உள்ள கூடு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி 5 நாட்கள் நடந்தது.
இப்பயிற்சியில் மாணவிகளுக்கு வேளாண்மை சார்ந்த பணிகளான நீர் நிலைகள் அமைப்பது, நீர்நிலை தேக்கங்கள் அமைப்பது, மியாவாக்கி காடுகள் அமைப்பது, இலவச மரக்கன்றுகள் வழங்குவது, பண்ணை குட்டைகள் அமைப்பது போன்ற பல்வேறு செயல்பாடுகளைக் செய்து காட்டினர்.
மாணவிகள் குளக்கரையில் மரக்கன்றுகளை நட்டனர். பயிற்சியில் ஈடுபட்பட மாணவிகளுக்கு கூடு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைமையகமான ராமநாதபுரமத்தில் பயிற்சிப் பெற்றதற்கான சான்றிதழ் அளிக்கப்பட்டன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.