அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா அதிரடி மாற்றம்
1 min read
Minister Rajakannappan portfolio change of action
29.3.2022
போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அமைச்சர் கண்ணப்பன்
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வரும் ராஜ கண்ணப்பன் துறை மாற்றப்பட்டுள்ளது. ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முதல் முறையாக அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி கூறி விமர்சித்ததாக நேற்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ராஜகண்ணப்பன் துறை மாற்றப்பட்டுள்ளது.