முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு செய்தி பரப்பிய பா.ஜ.க. நிர்வாகி கைது
1 min readThe BJP has spread slanderous news about First Minister MK Stalin. Administrator arrested
29.3.2022
தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக எடப்பாடியை சேர்ந்த பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் அண்மையில் அரசு முறை பயணமாக துபாய் நகருக்குச் சென்று வந்தார். இந்நிலையில் முதல்-அமைச்சரின் துபாய் பயணம் குறித்து எடப்பாடி அடுத்த நாச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த அருள் பிரகாஷ் (வயது 30) என்பவர் சமூக ஊடகங்களில் பல்வேறு அவதூறு கருத்துக்களை பதிவு விட்டதாக கூறி இன்று போலீசார் கைது செய்தனர்.
பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி பொறுப்பாளரான அருள்பிரகாஷ் அப்பகுதியில் ஹோட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சமூக ஊடகங்களில் தமிழக முதல்-அமைச்சர் துபாய் சென்றபோது அவர் அணிந்திருந்த ஆடைகள் சுமார் 17 லட்சம் மதிப்புடையது என்று அவதூறான கருத்துக்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் அருள் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் தொடர் விசாரணைக்காக சங்ககிரியில் உள்ள உதவி காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பகுதியில் பாஜக நிர்வாகி திடீரென கைது செய்யப்பட்ட நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.