June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் 2 ஆண்டுகளுக்குப்பிறகு தேரோட்டம் நடந்தது

1 min read

The chariot festival took place 2 years later in Kadayam

15.4.2022
கடையத்தில் 2 ஆண்டுகளுக்குப்பிறகு தேரோட்டம் நடந்தது.

நித்திய கல்யாணி அம்மன் கோவில்

கடையத்தில் நித்திய கல்யாணி அம்மன் உடனுறை வில்வவன நாதர் கோவில் உள்ளது. ஊருக்கு 2 கிலோ மீட்டர் மேற்கே இந்தக் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கோவிலுக்குரிய சுவாமி, அம்மன் வீதி உலா கடையம் பஸ்நிலையத்தில் உள்ள சிவன் கோவிலை மையமாக கொண்டு நடைபெறும்.

தேரோட்டம்

இன்று 9ம் திருநாளையொட்டி தேரோட்டம் நடந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தக் கோவிலில் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 8.15 மணிக்கு தேர் நிலையை விட்டு கிளம்பியது. பல ஆண்டுகளுக்கு பிறகு அம்மன் தேர் தனியாக ஓடியது. ஆரம்பத்தில் அம்மனுக்கு தனித் தேர் இருந்தது. அந்த தேர் சேதம் அடைந்ததால் அத நின்றது. அம்மனும் சாமியும் ஒரே தேரில் எழுந்தருளினார்கள். ஆனால் இந்த ஆண்டு அம்மன் தனி தேரில் வலம் வந்தார்.
காலை10 மணி அளவில் தேரில் சார் பதிவாளர் அலுவலம் வரை தேர்தகள் வந்து நின்றன. அதன்பின் மாலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடர்ந்தது. 6,30 மணி்க்கு தேர் நிலைக்கு வந்தது.
தேரோட்டத்தை பார்க்க சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *