பள்ளியில் வைத்து மாணவிக்கு தாலி கட்டிய 9ம் வகுப்பு மாணவன்
1 min readA 9th grade student who kept a thali for a student at school
30.4.2022
பள்ளியில் வைத்து மாணவிக்கு 9ம் வகுப்பு மாணவன் தாலி கட்டினான்.
மாணவன்
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே திப்பசந்திரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் தன்னுடன் படிக்கும் சக மாணவி ஒருவருக்கு பள்ளி வளாகத்தில் வைத்து கடந்த சில நாட்களுக்கு முன் தாலி கட்டியுள்ளார். இதை பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் நேரடியாக பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து விசாரித்தனர்.
இதையடுத்து பள்ளி தலைமையாசிரியர் மாணவரின் பெற்றோரை வரவழைத்து மாணவ, மாணவியரை எச்சரித்து அனுப்பி உள்ளார். 9ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளதால் மாணவர்கள் மீது இது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் அன்பழகன் தலைமையிலான கல்வித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை சுற்றுப்புற பகுதியில் உள்ள பள்ளிகளில் நடக்கும் சீர்கேடுகளையும், அவல நிலைகளையும், ஒழுக்கமின்மை அறிந்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனை அடைந்துள்ளனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து பள்ளிகளில் நடக்கும் சீர்கேடுகளையும், ஒழுக்கமின்மையும் சரிசெய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்தப் பள்ளிகளில் நடக்கும் ஒழுக்கமின்மையால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.