இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் இந்திய தூதர் சந்திப்பு
1 min read
Indian Ambassador meets Sri Lankan Prime Minister Ranil Wickremesinghe
13.5.2022
சவாலான தருணத்தில் இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்துப்பேசினார்.
ரணில் விக்ரமசிங்கே
இலங்கையில் மக்கள் எதிர்ப்புக்கு பணிந்து மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்றுக்கொண்ட போதிலும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வருகிறது.
வாலான தருணத்தில் இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பின்போது புதிதாக பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியத் தூதர் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
நன்றி
முன்னதாக இலங்கைக்கு நிதியுதவி, நிவாரணம் வழங்கி வரும் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்தது நினைவிருக்கலாம்.