June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 44 பேருக்கு கொரோனா

1 min read

Corona affected 44 person today in TamilNadu

13.5.2022
தமிழகத்தில் இன்று 44 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக கட்டுக்குள் உள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு 50க்கும் கீழே பதிவாகி வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-

தமிழகத்தில் இன்று புதிதாக 16 ஆயிரத்து 524 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 25 பேரும், பெண்கள் 19 பேரும் உள்பட 44 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 28 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும் உள்பட 9 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

தமிழகத்தில் தொடர்ந்து 57-வது நாளாக கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 58 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 16 ஆயிரத்து 107 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *