May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

எந்த மொழியையும் திணிக்க கூடாது; மற்ற மொழிகளை எதிர்க்கக் கூடாது: வெங்கையா நாயுடு பேச்சு

1 min read

No language should be imposed; Do not oppose other languages: Venkaiah Naidu speech

28.5.2022
எந்த மொழியையும் திணிக்க கூடாது; மற்ற மொழிகளை எதிர்க்கக் கூடாது என்று கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேசினார்.

கருணாநிதி சிலை திருப்பு

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணா சாலை ஓரத்தில் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நேற்று திறந்து வைத்தார்.
விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

கலைஞர் சிலையை திறந்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் கலைஞர் கருணாநிதி. அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கலைஞர் கருணாநிதி இந்தியாவின் பெருமை மிக்க முதல் அமைச்சர்களில் கலைஞரும் ஒருவர். என் இளம் வயதில் கலைஞரின் உரையால் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன்.

நிர்வாகத்திறமை

கருணாநிதி சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவர். கலைஞர் கைது செய்யப்பட்ட போது ஜனநாயகத்திற்காக வாதாடினேன். கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் தமது தரப்பு கருத்தை முன்வைப்பதில் கலைஞர் தனித்திறன் கொண்டவர். பன்முகத்தன்மை அர்ப்பணிப்பு, உழைப்பு என பல்வேறு ஆற்றல் நிறைந்தவர் கருணாநிதி அரசியல் பதவி முள்கிரீடம் என்று கூறியவர் கருணாநிதி. தமிழ் சினிமாவின் புதிய அத்தியாத்தை எழுதியவர் கருணாநிதி. சொல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. என்ற குறள் கலைஞருக்கு பொருந்தும். தமிழையும் தமிழ் பண்பாட்டையும் வளர்த்தவர் கருணாநிதி. மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளேன். மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடு வளர்ச்சி அடையும். நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். தாய்மொழியே இதயத்தின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும். வேற்றுமையில் ஒற்றுமையே நமது நாட்டின் சிறப்பு. இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்று அங்கீகரிக்க வேண்டும். எந்த மொழியையும் திணிக்க கூடாது; மற்ற மொழிகளை எதிர்க்கக் கூடாது. தேவை என்றால் எவ்வளவு மொழியை வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.