June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

விரைவில் வருது மின்சார டிராக்டர்: நிதின் கட்காரி தகவல்

1 min read

Coming Soon Electric Tractor: Nitin Gadkari Info

6.4.2022
விரைவில் மின்சார டிராக்டர்கள் மற்றும் டிரக்குகளை அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

மராட்டிய மாநிலம் புனேயில் நடந்த விழாவில் நிதின் கட்காரி பேசியதாவது:-

மின்சார வாகனம்

எதிர்காலத்தில், எத்தனால், மெத்தனால் போன்ற மாற்று எரிபொருளும் மின்சார வாகனங்களும் தான் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்றும். 3 ஆண்டுகளுக்கு முன்பு, மின்சார வாகனங்கள் தொடர்பாக நான் பேசிய போது, பலர் கேள்வி எழுப்பினர். ஆனால், தற்போது, மின்சார வாகனங்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
மின்சார ஸ்கூட்டர்கள், கார்கள், பஸ்களை தொடர்ந்து, விரைவில் மின்சார டிராக்டர்கள் மற்றும் டிரக்குகளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.