சிவகிரி அருகே திருமணமான 4 மாதத்தில் கர்ப்பிணி தற்கொலை
1 min readPregnant woman commits suicide within 4 months of marriage near Sivagiri
7.6.2022
சிவகிரி அருகே திருமணமான 4 மாதத்திலேயே கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தனிக்குடித்தனம்
தென்காசி மாவட்டம் சிவகிரி கருங்குளம் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி கனகலெட்சுமி. இவர்களது மகள் துர்காதேவி(வயது 20). இவருக்கும், விருதுநகர் மாவட்டம் கார்த்திகை பட்டியை சேர்ந்த கருத்தபாண்டி(22) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
தற்போது துர்கா தேவி 3 மாத கர்ப்பமாக இருந்தார். இதற்கிடையே கணவன்-மனைவி இடையே தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த துர்கா தேவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.
தற்கொலை
இதற்கிடையே குடும்பம் நடத்துவதற்கு தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று கூறி கருத்தபாண்டி சிவகிரி ஊர் நாட்டாமைகளிடம் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்கள்: மக்களுக்கு தரமான உணவை வழங்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை அவமானமாக கருதிய துர்காதேவி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். பின்னர் சிவகாசியில் உள்ள தனது சித்தியிடம், விஷம் குடித்துவிட்டதாக செல்போனில் தெரிவித்துள்ளார். உடனே அவர் துர்காதேவி வீட்டின் அருகே உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் அங்கு விரைந்து சென்று துர்காதேவியை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.