June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் மேலும்3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

1 min read

Also in Tenkasi district 3 people arrested under gangster law

1.6.2024
தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் பல்வேறு தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 7 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தென்காசி எஸ்.பி.சுரேஷ்குமார் நேற்று மேலும் மூன்று நபர்களை அதிரடியாக குண்டத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை, கொலை முயற்சி வழக்குகளின் குற்றவாளியான வாசுதேவ நல்லூர் புதுமந்தை தெருவை சேர்ந்த முத்துப்பாண்டியன் என்பவரது மகன் இளங்கோவன் (வயது 28), வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி போன்ற வழக்குகளின் குற்றவாளியான மலையடி குறிச்சி முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா என்பவரது மகன் ஜெயச்சந்திரன் என்ற விஞ்ஞானி (வயது 33) மற்றும்

சங்கரன்கோவில் பகுதிகளில் கொலை முயற்சி, வழிப்பறி போன்ற வழக்குகளின் குற்றவாளியான சங்கரன் கோவில் காவேரி நகரைச் சேர்ந்த சங்கரன் என்பவரது மகன் செந்தில்குமார் (வயது 42) ஆகியோர் மீது தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் டி.பி.சுரேஷ்குமார் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோருக்கு பரிந்துரை செய்தார்.அதனை ஏற்றுக் கொண்ட , மாவட்ட ஆட்சித்தலைவர் மூன்று பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து மூன்று பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *