May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

1 min read

Perambalur district topped the Plus 1 general election results

27.6.2022
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. சென்னை, தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

பிளஸ்-2 முடிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. 8 லட்சத்துக்கு மேற்பட்டோர் தேர்வை எழுதினர். இந்த பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் சென்று தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தேர்வர்கள் மேற்கண்ட இணையதளங்களில் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பப்பதிவில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது.
பிளஸ் 1 பொதுத்தேர்வில் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.99 சதவீதம் மாணவர்கள் 84.6 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பெரம்பலூர்

மாநில அளவில் 95.56 சதவீதம் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் 2வது இடம் விருதுநகர் – 95.44%: 3வது இடம் மதுரை – 95.25% தேர்ச்சி – பள்ளிக்கல்வித்துறை பிளஸ் 1 தேர்வு எழுதிய 94.99% மாணவிகள் மற்றும் 84.86% மாணவர்கள் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகள் 10.13% கூடுதலாக தேர்ச்சி
பிளஸ் 1 பொதுத்தேர்வை 41,376 மாணவர்கள் எழுதவில்லை – பள்ளிக்கல்வித்துறை இதுதவிர மாற்றுத்திறனாளி மாணவர்களாக தேர்வு எழுதிய 4 ஆயிரத்து 470 பேரில், 3 ஆயிரத்து 899 பேரும், சிறைவாசிகளாக தேர்வு எழுதிய 99 பேரில் 89 பேரும் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். பள்ளிகள் வகைப்பாடு வாரியாக தேர்ச்சி சதவீதத்தை பார்க்கையில், அரசு பள்ளிகள் 83.27 சதவீதமும், உதவிபெறும் பள்ளிகள் 91.65 சதவீதமும், தனியார் சுயநிதி பள்ளிகள் 99.35 சதவீதமும், இருபாலர் பள்ளிகள் 90.44 சதவீதமும், பெண்கள் பள்ளிகளில் 94.90 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 78.48 சதவீதமும் பெற்றுள்ளனர்.
இதேபோல், பாடப்பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவீதத்தில், அறிவியல் பாடப்பிரிவில் 93.73 சதவீதமும், வணிகவியல் பாடப்பிரிவுகளில் 85.73 சதவீதமும், கலைப்பிரிவுகளில் 72.49 சதவீதமும், தொழிற்பாடப் பிரிவுகளில் 76.15 சதவீதமும் தேர்ச்சி கிடைத்துள்ளது. முக்கிய பாடங்களின் வரிசையில் தேர்ச்சி சதவீதம் புள்ளிவிவரத்தின்படி பார்க்கும்போது, தாவரவியல், விலங்கியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் போன்றவற்றில் தேர்ச்சி சதவீதம் அதிகமாக குறைந்திருக்கிறது. மற்றவற்றில் 90 சதவீதத்துக்கு மேல் என்ற அளவிலேயே தேர்ச்சி சதவீதம் உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.