May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர் வரீந்தர் சிங் மரணம்

1 min read

Former Indian cricketer Varinder Singh dies

28.6.2022
ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், உலகக் கோப்பையை வென்ற ஆக்கி வீரருமான வரீந்தர் சிங் காலமானார்.

ஆக்கி வீரர்

ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், உலகக் கோப்பையை வென்ற ஆக்கி வீரருமான வரீந்தர் சிங் காலமானார். 1970களில் இந்தியாவின் மறக்கமுடியாத சில வெற்றிகளில் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த வரீந்தர் சிங், ஜலந்தரில் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.

ஒலிம்பிக்கில் பதக்கம்

கோலாலம்பூரில் 1975 ஆண்களுக்கான ஆக்கி உலகக் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் வரீந்தர் சிங் முக்கிய வீரராக இருந்தார். 1972 ஆம் ஆண்டு முனிச் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியிலும், 1973 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடந்த உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியிலும் வரீந்தர் சிங் இந்திய ஆக்கி அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தார். அவர் முறையே 1974 மற்றும் 1978 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். 1975 மாண்ட்ரீல் ஒலிம்பிக்கில் விளையாடிய இந்திய அணியில் இடம்பெற்றார். 2007ம் ஆண்டு வரீந்தர் சிங்கிற்கு மதிப்புமிக்க தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
வரீந்தர் சிங்கின் மறைவுக்கு ஆக்கி இந்தியா அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது. “வரீந்தர் சிங்கின் சாதனைகள் உலகெங்கிலும் உள்ள ஆக்கி சகோதரத்துவத்தால் நினைவுகூரப்படும்” என இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.