May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்களை கைகுலுக்கி சந்தித்த பிரதமர் மோடி

1 min read

Prime Minister Modi shakes hands with world leaders including Joe Biden

27.6.2022
இந்த ஆண்டுக்கான மாநாடு, ஜெர் மனியின் எல்மாவ் நகரில் 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. பெர்லின், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்த அமைப்பின் மாநாடு நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாநாடு, ஜெர் மனியின் எல்மாவ் நகரில் 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. நேற்று மாநாடு தொடங்கியது.
இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்தநிலையில் ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனிக்கு சென்ற பிரதமர் மோடியை ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கால்ஸ் கைகுலுக்கி வரவேற்றார். மேலும், மாநாட்டில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோரும் பிரதமர் மோடியிடம் கைகுலுக்கி மகிழ்ந்தனர். இதையடுத்து, உலக தலைவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.