May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

கணவர் இறந்து விட்டதாக கூறி இன்சுரன்ஸ் பணம் ரூ. 25 லட்சத்தை பெற்ற பெண்

1 min read

The insurance money claiming that her husband had died was Rs. The woman who got 25 lakh

28.6.2022
வெளிநாட்டில் வசித்து வந்த கணவர் இறந்து விட்டதாக கூறி வங்கியில் இன்சுரன்ஸ் செய்து இருந்த ரூ. 25 லட்சம் பணத்தை மனைவி அபேஸ் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இன்சூரன்ஸ்

இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவன் இறந்துவிட்டதாக போலி சான்றிதழ் கொடுத்து ரூ.25 லட்சம் பணத்தை மனைவியே அபேஸ் செய்த சம்பவம் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் உள்ள பரனா காவல்நிலைய எல்லைக்குட்டபட்ட பகுதியில் அரங்கேறி உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றிருக்கிறார் நுர்ஜமால் ஷேக். இவரது மனைவி ஷாஹினா கதும். நுர்ஜமால் சவுதிக்கு சென்ற பிறகு ஷாஹினா அவரிடம் பேசுவதை குறைத்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அவரால் உடனடியாக இந்தியா வர முடியாது என்பதை அறிந்திருந்த ஷாஹினா, நுர்ஜமால் பேரில் உள்ள இன்ஷுரன்ஸ் பணம் மற்றும் அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையும் அபேஸ் செய்ய திட்டம் தீட்டி உள்ளார்.

இதற்காக சவுதியில் உயிரோடு இருக்கும் கணவர் நுர்ஜமால் ஷேக் இறந்துவிட்டதாக போலிச் சான்றிதழ் தயாரித்து அதனை வைத்து வங்கிக்கு சென்று அவரது கணக்கில் உள்ள பணம், காப்பீடு நிறுவனத்திலிருந்து இன்ஷுரன்ஸ் பணம் என 25 லட்ச ரூபாயையும் பெற்று ஷாஹினா தப்பி ஓடி விட்டார்.

போலீசில் புகார்

இந்த நிலையில் 5 ஆண்டுகள் கழித்து சவுதியில் இருந்து சொந்த ஊர் திரும்பி வந்த நுர்ஜமால், வங்கிக்கு சென்ற போது தான் இறந்துவிட்டதாக சான்றிதழ் காட்டி மனைவி ஷாஹினா பணத்தை எடுத்து விட்டதாக அவரிடம் மேனேஜர் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நுர்ஜமால், ஷாஹினா குறித்து போலீசில் புகாரும் அளித்திருக்கிறார்.

அதில், தனது மனைவிக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதால் என்னுடைய பணத்தை எல்லாம் சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டார் எனவும், எனக்கு எனது பணத்தையும், நீதியையும் பெற்று தரும்படியும் போலீசாரிடம் வலியுறுத்தி உள்ளார்.

s

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.