மராட்டிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே; துணை முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு
1 min read
Eknath Shinde as Maratha First-Minister; Devendra Patnaik sworn in as Deputy First Minister
30/6/2022
மராட்டிய மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக்கொண்டார்.
ஏக்நாத் ஷிண்டே
சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியிலிருந்து நேற்று ராஜினாமா செய்த நிலையில் ஆட்சி அமைக்க தேவேந்திர பட்னாவிசும் ஏக்நாத் ஷிண்டேவும் ஆளுநர் கோஷ்யாரியிடம் உரிமை கோரினர். ஆட்சி அமைக்க உரிமை கோரி வந்த தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டேவுக்கு இனிப்பு ஊட்டினார் ஆளுநர் கோஷியாரி. தங்களுக்கு தான் பெரும்பான்மை பலம் இருப்பதாக இருவரும் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.
பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக ஏக்நாத் ஷிண்டேதான் மராட்டிய முதல்-மந்திரியாக பதவியேற்பார் என தேவேந்திர பட்னாவிஸே அறிவித்தார்.
இந்தநிலையில், மராட்டிய முதல்-மந்திரியாக இருந்த உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்ததையடுத்து புதிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றார். ஏக்நாத் ஷிண்டேவுக்கு மராட்டிய ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நம்பிக்கை வாகெடுப்பில் தோல்வியை தவிர்க்க முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் மராட்டிய மாநில முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றுக்கொண்டார். பால் தாக்கரே பெயரை குறிப்பிட்டு மராத்தி மொழியில் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
துணை முதல் மந்திரி

மராட்டிய மாநில துணை முதல்-மந்திரியாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றுக்கொண்டார். அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன் என பட்னாவிஸ் அறிவித்த நிலையில் பாஜக உத்தரவை ஏற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
வாழ்க்கை குறிப்பு
1964-ல் பிறந்த ஏக்நாத் ஷிண்டே பள்ளிப்படிப்பை கூட முழுமையாக முடிக்காமல் ஆட்டோ ஓட்டி வந்தார். பால்தாக்கரே மீது கொண்ட் அதீத ஈர்ப்பு காரணமாக 1980-ல் சிவசேனாவில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியில் படிப்படியாக வளர்ந்த ஏக்நாத் ஷிண்டே 2004-ம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2009-ல் மந்திரி பதவி தர காங்கிரஸ் முன் வந்த போதும் அதை நிராகரித்து சிவசேனாவில் இருந்தார் ஷிண்டே.