December 8, 2024

Seithi Saral

Tamil News Channel

3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

1 min read

PSLV C-53 rocket with 3 satellites launched

30.6.2022
டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோள் உள்பட 3 செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் விண்ணில் பாய்ந்தது.

செயற்கைகோள்

டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோள் உள்பட 3 செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து மாலை 6 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான 25 மணிநேர கவுண்ட்டவுன், நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. டிஎஸ்-இஓ செயற்கைகோள் அதிக தெளிவுதிறன் மற்றும் ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை படம் எடுக்கும் வசதி கொண்டது என்றும், கடல்சார் பாதுகாப்பு, பேரிடர் மீட்பு, பேரிடர் மீட்பிற்கு தேவைப்படும் மனித வளங்களை கண்டறிவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 44.4 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் பூமியில் இருந்து 570 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.