June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,765 பேருக்கு கொரோனா

1 min read

In Tamil Nadu, 2,765 people were infected with Corona in one day

7.7.2022
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 2,765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது:-
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை ) 32,408 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 1,011; செங்கல்பட்டு 408; திருவள்ளூர் 184;கோவை 125; காஞ்சிபுரம் 124; திருச்சி 93 ; திருநெல்வேலி 86; கன்னியாகுமரி 59; தூத்துக்குடி 49; விழுப்புரம் 43; ஈரோடு 42 ;சேலம் 41; மதுரை 37; கடலுார் 36; சிவகங்கை 33; ராணிப்பேட்டை 32; தேனி 31; நாமக்கல் 29; விருதுநகர் 27; திருவண்ணாமலை, தஞ்சாவூர்24; திருப்பூர் 23; கள்ளக்குறிச்சி 21; பெரம்பலுார்19; புதுக்கோட்டை18; தென்காசி 17; திண்டுக்கல் 16; வேலூர், கிருஷ்ணகிரி 15; கரூர்,திருவாரூர் 13; ; நாகை 12; தர்மபுரி 10; நீலகிரி 8; ராமநாதபுரம், திருப்பத்துார் 7; நாகப்பட்டினம் 6; மயிலாடுதுறை 4, என மொத்தம் 2,765 பேருக்கு தொற்று உறுதியானது. அரியலுாரில் யாருக்கும் தொற்று பதிவாகவில்லை.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,93,599 ஆக அதிகரித்துள்ளது. இன்று 2,103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,37,193 ஆக உயர்ந்துள்ளது.

ஒருவர் பலி

இன்று கொரோனாவால் ஒருவர் பலியான நிலையில் பலியானோர் எண்ணிக்கை 38,028 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. நேற்று (ஜூலை 6 ம் தேதி ) 1062 ஆக இருந்த நிலையில் இன்று (ஜூலை 7 ம் தேதி) சென்னையில் 1,011ஆக உள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 18,738 ஆக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *