தமிழகத்தில் இன்று 2,537 பேருக்கு கொரோனா
1 min read
Today, 2,537 people are infected with Corona in Tamil Nadu
10.7.2022
தமிழகத்தில் இன்று 2,537- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில கொரோனா
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்தில் இருந்த கொரோனா தற்போது குறையத்தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.
தமிழகத்தில் இன்றை கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் மேலும் 2,537 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 01 ஆயிரத்து 529 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,560- ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. தொற்று பரவலைக் கண்டறிய இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 34, 469 ஆகும். தலைநகர் சென்னையில் 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.