June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 2,446 பேருக்கு கொரோனா

1 min read

2,446 people have corona in Tamil Nadu today

11.7.2022
தமிழகத்தில் இன்று 2,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பும் நேற்றை விட குறைந்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 2,446 ஆக பதிவாகியுள்ளது. நேற்று பாதிப்பு 2,537 ஆக பதிவானது. கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 18,819ல் இருந்து 18,802 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,465 ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் இன்று 796 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.