June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

1 min read

Yellow alert for 11 districts in Kerala

10.7.2022
கேரளாவில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவனந்தபுரம், கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்துவருகிறது.
இந்த நிலையில், கேரளாவில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 11 மாவட்டங்களில் இன்று முதல் வருகிற 13-ந் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே இந்த 11 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகள், ஆற்றங்கரைகள் மற்றும் நிலச்சரிவு, மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *