June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

சுகேஷ் சந்திரசேகரிடம் ரூ.12 கோடி லஞ்சம் பெற்ற 81 சிறை அதிகாரிகள்

1 min read

81 prison officers who received Rs 12 crore bribe from Sukesh Chandrasekhar

12.7.2022
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகரிடம் ரூ.12 கோடி லஞ்சம் பெற்ற 81 சிறை அதிகாரிகள் விவரம் தெரியவந்துள்ளது.

சுகேஷ் சந்திரசேகர்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு இருந்து தன்னை வேறு சிறைசால்லைக்கு மாற்ற வேண்டும் என கோஒர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளார்.
இந்த நிலையில் சிறையில் உள்ள 80க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் சுகேஷ் சந்திரசேகரிடம் லஞ்சம் வாங்கியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறை அதிகாரிகள் அவரிடம் லஞ்சம் வாங்கி கொண்டு சந்திரசேகருக்கு மொபைல் போன்கள், ஒரு தனி அறை மற்றும் பிற சொகுசு வசதிகளை வழங்கி உள்ளனர்.

8 அதிகாரிகள்

மொத்தம் 81 அதிகாரிகள் ரூ.12 கோடி லஞ்சம் வாங்கி உள்ளனர். இது சுகேஷ் சந்திரசேகருக்கு சிறைக்குள் இருந்து கொண்டு அவரது சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள அவரது கூட்டாளிகளை தொடர்பு கொள்ள உதவியது. திகார் சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற்றதையடுத்து போலீசார் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே 8 சிறை ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு முன், சந்திரசேகர் தனது கூட்டாளிகளை தொடர்பு கொள்ள சிறை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ ஊழியர்களின் உதவியை பெற்றதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சிறை அதிகாரிகளுக்கு, மாதந்தோறும், ரூ.1.5 கோடி ரூபாய் லஞ்சமாக, கொடுத்தது தெரியவந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *