இந்தியாவில் முதன்முதலில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர் குணம் அடைந்தார்
1 min readIndia’s first monkey measles victim recovers
30/7/2022
இந்தியாவில் முதன்முதலில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பபட்டவர் குணம் அடைந்தார்.
குரங்கு அம்மை
இந்தியாவில் கடந்த 14 ஆம் தேதி குரங்கு அம்மை பாதிப்பு முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் வயநாடு வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 35 வயதான குரங்கு அம்மை பாதித்தவர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில்,நோய்த்தொற்றில் இருந்து முழுமையாக குணம் அடைந்ததையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 72 மணி நேர இடைவெளியில் இருமுறை மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டுமே நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளதாகவும் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள், தொடர்பில் இருந்தவர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை நான்கு பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.