June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் புதிதாக 17,135 பேருக்கு கொரோனா

1 min read

17,135 new corona cases in India

3.8.2022
இந்தியாவில் மேலும் புதிதாக 17,135 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளத.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரதம் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்து 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த திங்கட்கிழமை பாதிப்பான 16 ஆயிரத்து 464 மற்றும் செவ்வாய்க்கிழமை பாதிப்பான 13 ஆயிரத்து 734-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 144 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 3 ஆயிரத்து 610 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 57 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

47பேர் சாவு

கொரோனா தாக்குதலுக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 477 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 204 கோடியே 84 லட்சத்து 30 ஆயிரத்து 732 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *