July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12,751 ஆக குறைந்தது

1 min read

Daily corona cases in India drop to 12,751

9/8/2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12,751 ஆக குறைந்தது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. சில நாட்களாக உயர்ந்து வந்த தினசரி பாதிப்பு இன்று 4-வது நாளாக குறைந்தது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், இது 12 ஆயிரத்து 751 ஆக குறைந்தது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 74 ஆயிரத்து 650 ஆக அதிகரித்தது. கொரோனாவில் இருந்து இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 412 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 4 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரத்து 71 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 807 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு நேற்று 41 பேர் பலியாகி இருந்தனர். இன்று பலி எண்ணிக்கை 41 ஆக சற்று அதிகரித்தது. இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5 லட்சத்து 26 ஆயிரத்து 772 பேர் இறந்துள்ளனர். நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,06,88,49,775 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 31,95,034 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தவலை மத்திய சுகாதார அமைச்சகம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.