கவர்னருடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு
1 min read
Actor Rajinikanth has a surprise meeting with the Governor
8.8.2022
சென்னையில் கவானர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் 2 நாள் பயணமாக டெல்லி சென்றடைந்திருந்தார். இதற்கு முன்பாக டெல்லி பயணத்தின் ஒரு அங்கமாக சந்திரபாபு நாயுடுவை சந்தித்திருந்தார்.
அவர் இன்று காலை டெல்லியில் இருந்து சென்னை வந்தார். இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை நடிகர் ரஜினிகாந்த், சந்தித்து பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்ததற்கான முழுமையான விவரங்கள் தற்போது வெளியாகாத நிலையில் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக அவரது செயதி தொடர்பாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 25 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், கூறப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து ரஜினி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக ஆளுநராக ஆளுநர் ஆர்.என். ரவி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நடிகர் ரஜினி சந்தித்திருக்கிறார்.
பேட்டி
இது குறித்து நிருபர்களூக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் கூறியதாவது:-
கவர்னருடனா சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய எதுவேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளேன் என கவர்னர் ரவி கூறினார். காஷ்மீரில் பிறந்து, அதிக காலம் வட இந்தியாவில் வளர்ந்தவர் கவர்னர் ரவி. தற்போது தமிழகத்தில் இருக்கும் ஆன்மிக உணர்வு அவரை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தமிழர்களின் கடின உழைப்பு, நேர்மை போன்றவை மிகவும் பிடித்திருப்பதாக அவர் கூறினார்.
கவர்னருடன் 30 நிமிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருடன் அரசியல் குறித்து விவாதித்தோம்; ஆனால் அதை உங்களிடம் தற்போது சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசியலுக்கு வரப்போவது இலலை
மீண்டும் அரசியலுக்கு வரப்போகிறீர்களா? என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று நடிகர் ரஜினி பதிலளித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் பற்றி விவாதித்தீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது பற்றி சொல்ல முடியாது என்று ரஜினி பதிலளித்தார். ஜெயிலர் படப்பிடிப்பு ஆகஸ்ட் 15 அல்லது 25ஆம் தேதி தொடங்கும் என்று கூறினார்.
மீண்டும் அரசியலா? தமிழக கவர்னரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்து வெளியே வந்த போது நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேள்விகள் எழுப்பினர அப்போது மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டனர் அதற்கு ரஜினிகாந்த் அவ்வாறு எந்த திட்டமும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்